நாம் தமிழர் கட்சிக்கு மாநிலக்கட்சி அங்கீகாரம்!

63பார்த்தது
நாம் தமிழர் கட்சிக்கு மாநிலக்கட்சி அங்கீகாரம்!
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, 8.2 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருந்தது. இந்த தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்ற நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 2016ல் தொடங்கி 8 ஆண்டுகளில் மாநிலக் கட்சியாகப் பரிணமித்திருப்பது தமிழின அரசியல் வரலாற்றில் ஒரு புத்தெழுச்சிப்பாய்ச்சல் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மேலும் இதனை ஊக்கமாக கொண்டு 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க உறுதியேற்கிறோம் என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி