சென்னை வியாசர்பாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய தவெக பெண் நிர்வாகிகளை போலீசார் பூட்ஸ் காலால் எட்டி உதைத்தது கண்டிக்கத்தக்கது என்று தவெக தலைவர் விஜய் அறிவிக்கை வெளியிட்டார். இந்நிலையில் தவெகவை சேர்ந்த பெண்ணிடம் விஜய் போனில் பேசினார். அதில், “என் ஆடைய கிழிச்சி., வலி தாங்க முடியல அண்ணா.. உங்க ஒருத்தருக்காக நாங்க எல்லாத்தையும் தாங்க தயாரா இருக்கோம்” என பாதிக்கப்பட்ட பெண் புகார் கூறினார்.