மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் இந்துப் பெண்ணை நீதிமன்றத்தில் வைத்து இஸ்லாமிய இளைஞர் ஒருவர் திருமணம் செய்ய முயன்றுள்ளார். இதனையறிந்த இந்துத்துவா குழு உறுப்பினர், நீதிமன்றத்திற்குள் நுழைந்து, அந்த இளைஞரை சரமாரியாக தாக்கினர். தொடர்ந்து, அவர்களை சுற்றிவளைத்துப் பிடித்த நீதிமன்ற வழக்கறிஞர்கள், போலீசிடம் ஒப்படைத்தனர். மேலும், அவர்கள் மீது லவ்ஜிஹாத் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.