பிரபல இசையமைப்பாளர் விஷ்ணு விஜய்க்கும், பாடகி பூர்ணிமாவுக்கும் கடந்த செவ்வாய் (டிச. 31) சென்னையில் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று (ஜன. 01) இதை இருவரும் அறிவித்தனர். மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த அம்பிலி, நாயட்டு, பீமனின் வழி, பட, தல்லுமாலா, சுலைகா மன்சில், பிரேமலு போன்ற பல படங்களுக்கு விஷ்ணு இசையமைத்திருக்கிறார். ரஜினியின் கபாலி திரைப்படத்திலும் அவர் பணி புரிந்துள்ளார்.