தற்கொலைக்கு முயன்ற கொலையாளி ஐசியூவுக்கு மாற்றம்

53பார்த்தது
தற்கொலைக்கு முயன்ற கொலையாளி ஐசியூவுக்கு மாற்றம்
திருவனந்தபுரம் வெஞ்சாரமூடு பகுதியில் காதலி, தம்பி உள்ளிட்ட 5 பேரை கொன்ற வழக்கில் 
சிறையில் அடைக்கப்பட்டு தற்கொலைக்கு முயன்ற குற்றவாளி அஃபான் வென்டிலேட்டரிலிருந்து ஐசியூவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அஃபானின் மூளை மற்றும் உள் உறுப்புகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூஜப்புரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அஃபான், மே 25ஆம் தேதி தற்கொலைக்கு முயன்றார். அவர் குளியலறையில் லுங்கியால் தூக்கிட்டுக்கொண்டார். தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

தொடர்புடைய செய்தி