உயிரோடு எரித்து கொலை.. புத்தாண்டில் சோகம்

69614பார்த்தது
உயிரோடு எரித்து கொலை.. புத்தாண்டில் சோகம்
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள சாலையில் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மக்கள் சென்றனர். இரவு 10.30 மணி அளவில் அந்த வழியே சதீஸ் என்ற இளைஞர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இருவர் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் திடீரென அவர்கள் வைத்திருந்த பெட்ரோலை சதீஸ் மீது ஊற்றி பற்றவைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். தீக்காயங்களுடன் அவரை மீட்ட போலீசார் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிசிடிவி அடைப்படையில் குற்றவாளிகை போலீசார் தேடிவருகின்றனர்.