இந்திய நாட்டை உலுக்கிய பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், ஜன.18-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட உள்ளது. கொல்கத்தாவில் உள்ள சியால்டா நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று ஜன.09 நடைபெற்ற இறுதி விசாரணையில், குற்றம்சாட்டப்பட்ட சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, 18-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.