சிபிசிஐடி மிகச்சிறப்பாக விசாரித்தால்தான் மாணவி கொலை வழக்கில் குற்றத்திற்கான தூண்டுதலைக் கண்டறிந்து, குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என அரசுத் தரப்பு வழக்கறிஞர் ரவீந்திரநாத் ஜெயபால் கூறியுள்ளார். மேலும், குற்றவாளிக்கு மரண தண்டனை, 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையுடன் ரூ.35,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.