இந்தியாவில் வருகிற ஜூலை 11 மற்றும் 12ஆகிய தேதிகளில் விமான கட்டணம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. வார இறுதி மற்றும் வெள்ளிக்கிழமை என்பதால் இந்த கட்டணம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வரும் ஞாயிற்றுக்கிழமை ஆனி மாதத்தின் கடைசி முகூர்த்த நாள் என்பதாலும் இந்த விமானக் கட்டணம் உயர்ந்து இருப்பதாக கூறப்படுகிறது. விமான கட்டண உயர்வு குறித்து பல புகார்கள் எழுந்தபோதிலும் மத்திய அரசு, கட்டண உயர்வை தடுக்க தவறிவிட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.