தமிழ்நாட்டில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக பலரும் வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை. மேலும், சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய லேசான முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, “சேலம், தருமபுரி, திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி, கிருஷ்ணகிரி” ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.