"பன் பட்டர் ஜாம்" படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு

69பார்த்தது
"பன் பட்டர் ஜாம்" படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு
பிக் பாஸ் சீசன் 5-ல் வெற்றி பெற்று மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் ராஜு ஜெகன் மோகன். இவர் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். இந்த படத்திற்கு 'பன் பட்டர் ஜாம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்தப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நேற்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அதில், போருக்கு மத்தியில் ராஜு பன்பட்டர் ஜாம் சாப்பிடும் படியான காட்சி இடம்பெற்றிருந்தது.