கார் மோதி தாய், மகன் பலி (வீடியோ)

85பார்த்தது
கிருஷ்ணகிரி: பர்கூர் அடுத்த தபால்மேடு பகுதியில் கார் மோதியதில் தாய், மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்த குமாரத்தி (50), அவரது மகன் திருப்பதி(35) ஆகியோர் மீது கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இக்கோர விபத்தில், குமாரத்தி மற்றும் திருப்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய முனுசாமி மற்றும் கீதா ஆகியோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி