அசாம்: கச்சார் மாவட்டத்தில், 30 வயது பெண் ஒருவர் குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த 28 வயது ஓட்டுநர், வலுக்கட்டாயமாக பெண்ணை, குழந்தைகள் முன் பலாத்காரம் செய்தார். பின்னர், அப்பெண் மீது ஆசிட் வீசிவிட்டுச் சென்றுள்ளார். வீட்டிற்கு வந்த கணவர், இந்த கொடூர சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து, அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார். குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.