ஆந்திரா: காக்கிநாடா மாவட்டம், அனக்கா பள்ளியை சேர்ந்த சந்து என்ற இளைஞர் 17 வயது மைனர் சிறுமியை காதலித்து திருமணம் செய்ததால் சிறைக்கு சென்றுள்ளார். இதையடுத்து, சந்துவின் தாயார் நீலிமாவும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து சிறுமிக்கு வலுக்கட்டாயமாக மயக்க மாத்திரை கொடுத்து விபசாரத்தில் ஈடுபட வைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் போலீஸில் புகாரளிக்கவே, மாமியார் நீலிமா மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்யப்பட்டுள்ளனர்.