வரதட்சணையாக கிட்னியை கேட்கும் மாமியார்.. தெறித்து ஓடிய மருமகள்

83பார்த்தது
வரதட்சணையாக கிட்னியை கேட்கும் மாமியார்.. தெறித்து ஓடிய மருமகள்
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தீப்தி என்ற பெண், முசாபர்பூரில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில், “2021ல் திருமணமான என்னை, மாமியார் குடும்பத்தினர் துன்புறுத்துகின்றனர். கணவருக்குச் சிறுநீரகக் கோளாறு இருப்பதை அறிந்ததும், வரதட்சணைக்குப் பதிலாக எனது சிறுநீரகங்களில் ஒன்றை தானம் செய்யுமாறு மாமியார் கட்டாயப்படுத்துகிறார். தானம் செய்ய மறுத்ததால், என்னை தாக்கினார்” என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து, 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி