நாமக்கல் போதுப்பட்டி காலனியில் வசித்து வரும் ரவிக்குமார், இந்துமதி (28) தம்பதிக்கு யாத்விக் ஆர்யன் (3) மற்றும் நிதின் ஆதித்யா என்ற 11 மாத குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் வழக்கம்போல வீட்டின் வெளியே உள்ள தண்ணீர் தொட்டி அருகே யாத்விக் விளையாடிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக திறந்திருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த இந்துமதி, கையில் இருந்த 11 மாத குழந்தையுடன் தனது மகனை மீட்க தண்ணீர் தொட்டியில் குதித்த நிலையில் 3 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.