ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டின் தலைமை செயல் அதிகாரியான ஸ்ரீஹர்ஷா மஜெட்டி இந்தத் தளத்தில் அதிகமாக ஆர்டர் செய்யப்படும் பொருள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார். ஸ்விக்கி என்றதும் அதிக அளவில் உணவுப் பொருள் விற்பனையாகி இருக்கும் அல்லது மளிகை சாமான்கள் விற்பனையாகி இருக்கும் என்று உங்களுக்கு தோன்றலாம். அதுதான் கிடையாது. அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட பொருள் பெட்ஷீட்கள் தான் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இன்ஸ்டாமார்ட்டில் அதிகம் தேடப்பட்ட பொருளாக பேட்டரிகள் உள்ளன.