மயிலாடுதுறையில் சீர்காழி நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் முன்னிலையில், கடந்த 17ஆம் தேதி நாதக சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அதிமுகவில் இணைந்த நிலையில், ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் தற்போது இணைந்துள்ளனர். தொடர்ச்சியாக நாதக தொண்டர்கள் கட்சியில் இருந்து விலகுவது அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.