மத்திய அரசு வரும் நாட்களில் பல்வேறு தேசிய ஓய்வூதியத் திட்டங்களை கொண்டுவர இருப்பதாக மத்திய அமைச்சர் மன்சுக் மண்டவியா கூறியுள்ளார். மேலும், “மக்களுக்கு, குறிப்பாக அமைப்புசாரா துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு பல ஓய்வூதியத் திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்களில் அடல் ஓய்வூதியத் திட்டம், பிரதமர் ஷ்ராமிக் மந்தன் மற்றும் பிரதமர் ஷ்ரம் யோகி மந்தன் ஆகியவை அடங்கும். இந்தத் திட்டங்கள் அனைத்தும் பயனாளி 60 வயதை அடைந்த பிறகு மாதந்தோறும் ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை ஓய்வூதியம் வழங்கப்படும்” என்றார்.