முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) நேற்று (டிச.26) இரவு காலமானார். இதனையறிந்த பிரதமர் மோடி உடனடியாக அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்து ஆறுதல் தெரிவித்தார். மறுபுறம், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா சம்பவ இடத்திற்குச் சென்றார். மேலும், மன்மோகன் மறைவுச் செய்தியை கேட்டவுடன் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அனைவரும் டெல்லி வந்தடைந்துள்ளனர். தொடர்ந்து, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.