பொதுமக்களின் நலனுக்காக ‘பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தை’ மத்திய மோடி அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தியா முழுவதும் 21 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு இந்தத் திட்டம் ரூ. 2 லட்சம் ஆயுள் காப்பீட்டுத் தொகையை வழங்குகிறது. அரசு தரப்பு அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, அக்டோபர் 20ஆம் தேதி நிலவரப்படி, இத்திட்டத்தின் கீழ் பதிவுசெய்தவர்களின் எண்ணிக்கை 21.67 கோடியாக உள்ளது. மொத்த உரிமைகோரல்களின் எண்ணிக்கை 860,575 ஆகும். இதன் மதிப்பு ரூ.17,211.50 கோடி ஆகும்.