ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

67பார்த்தது
ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்
இன்று காலை 08:54 மணியளவில் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பூமிக்கடியில் 140 கிமீ ஆழத்தில் மையம் கொண்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான சேதங்கள் ஏதும் இல்லை. இதனால் உயிரிழப்புகளும் தவிர்க்கப்பட்டுள்ளன. இந்தியா, ஆப்கானிஸ்தான், இந்தோனேஷியா பகுதிகளில் மிதமான அளவில் அவ்வப்போது தொடர் நிலநடுக்கங்கள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி