காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், நேரில் விசாரணைக்கு ஆராஜரான MLA ஜெகன்மூர்த்தியிடம் திருவாலங்காடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நீதிமன்ற உத்தரவின்பேரில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் திருத்தணி டி.எஸ்.பி அலுவலகத்திலிருந்து திருவாலங்காடு அழைத்து வரப்பட்டு விசாரணை தொடருகிறது. இவ்வழக்கில் தொடர்புடைய இரண்டு பேரிடம் ஒரே இடத்தில் காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர். MLA ஜெகன்மூர்த்தி கைதாகலாம் என்றும் சொல்லப்படுகிறது.