குடும்பச் சுயநலத்திற்காக ஒன்றிய பாஜக அரசிடம் தாள் பணிந்து தலைவணங்கி அடைக்கலம் புகுந்த திமுக தலைமை என தவெக தலைவர் விஜய் காட்டமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், "என்றைக்கு இருந்தாலும் ED காலைச் சுற்றும் பாம்பு என்பதை உணர்ந்த மு.க.ஸ்டாலின், தம் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்கிற அச்சத்தில் டெல்லி சென்றார். பிரதமரையும் வேறு தனியாகச் சந்தித்தார். இதன் மூலம் பாஜக - திமுக மறைமுக கூட்டணி வெளிவந்துவிட்டது" என்று பதிவிட்டுள்ளார்.