திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு முகத்துவாரப் பகுதியில் நேற்று (ஜன., 10) படகு கவிழ்ந்த விபத்தில் மாயமான மீனவர் செல்வம் உடல் இன்று (ஜன., 11) கரை ஒதுங்கியுள்ளது. நேற்று நடந்த விபத்தில் படகில் இருந்த 5 பேரில் மூவர் நீச்சல் அடித்து உயிர் தப்பினர். இந்த விபத்தில் மோகன் என்ற மீனவர் உயிரிழந்த நிலையில், செல்வம் என்பவர் மாயமானார். தற்போது அவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.