தாம்பரத்தில் செயல்பட்டு வரும் அரசு சேவை இல்லத்தில் தங்கியிருந்து பயின்று வந்த 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த விஷயத்தில் விடுதி காவலாளி மேத்யூ கைது செய்யப்பட்ட நிலையில், விடுதியின் பெண் கண்காணிப்பாளர் ரேவதி அலட்சியமாக பதில் அளித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பத்திரிகையாளர்கள் ரேவதியிடம் நடந்த விஷயம் குறித்து விளக்கம் கேட்டபோது, தான் இன்னும் சாப்பிடவில்லை. விட்டால் மயங்கிவிடுவேன் என அலட்சியத்துடன் பதில் கூறினார். இதனால் அங்கிருந்த பலரும் மனஉளைச்சலுக்கு உள்ளாகினர்.