காரை ஏற்றி இருவரை கொன்ற மைனர் சிறுவன் (வீடியோ)

70பார்த்தது
இன்று(மே 19) அதிகாலை 3:15 மணியளவில் புனே கல்யாணி நகரில் அனிஷ் அவாடியா மற்றும் அஸ்வினி கோஸ்டா ஆகிய இரு நபர்கள் பார்ட்டி முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது வேதாந்த் அகர்வால்(17) என்கிற மைனர் சிறுவன் காரை அதிவேகமாக ஓட்டி வந்து அவர்கள் மீது மோதியுள்ளார். இதனால் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சிறுவனை சிறைபிடித்த அப்பகுதி மக்கள், அவரை அடிக்கத் தொடங்கினர். பின்னர் சிட்டகாபாடி காவல்நிலையத்தில் சிறுவன் ஒப்படைக்கப்பட்டான்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி