திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் உடலுக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி
ஸ்டாலின், அன்பில் மகேஷ் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். அமைச்சர் உதயநிதி பதிவிட்டுள்ள X தள பதிவில், 'அண்ணன் கு.க.செல்வம் அவர்கள் உடல்நலக்குறைவால் மரணமடைந்த செய்தியறிந்து, அவருடைய இல்லத்துக்கு சென்று அண்ணனின் திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தோம். அண்ணனை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள், கழக உடன் பிறப்புகளுக்கு என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்' என பதிவிட்டுள்ளார்.