மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதை பெற்றுள்ள சர்வதேச ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பாவுக்கு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்குவாஷ் விளையாட்டில் தொடர் சாதனைகளை படைத்து, சர்வதேச அரங்கில் தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை தேடித் தந்து வரும் தங்கை ஜோஷ்னாவின் வெற்றிப்பயணம் தொடரட்டும் எனவும் கூறியுள்ளார். இதேபோன்று, பல்வேறு விளையாட்டு துறை வல்லுனர்களையும் அமைச்சர் உதயநிதி நேரில் சந்தித்து வாழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.