சட்டப்பேரவையில் பேசிய நிதியமைச்சர் அமைச்சர் தங்கம் தென்னரசு, “கும்பமேளாவுக்கு கோடிக்கணக்கான நபர்கள் வந்ததாக பெருமையாக சொல்கிறார்கள். ஆனால் மதுரையில் உள்ள கலைஞர் நூலகத்துக்கு 14 லட்சத்துக்கும் மேலானவர்கள் வந்துள்ளனர். இது தமிழ்நாட்டிற்கான பெருமை" என பெருமிதம் கூறினார். முன்னதாக நாடாளுமன்ற உரையின்போது கும்பமேளா 'இந்திய ஒற்றுமையின் வலிமை' என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்திருந்தார்.