ஒவ்வொரு அமாவாசைக்கும் எடப்பாடி பழனிசாமி கணக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், "அமாவாசைகள்தான் கடந்து சென்று கொண்டிருக்கின்றன. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடாமல் புறமுதுகிட்டு ஓடும் 23-ம் புலிகேசி பழனிசாமி, இன்னும் நூறு பெளர்ணமிகளுக்கு மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக தொடர்வார் என்பதை 2026ல் உணர்ந்து கொள்வார்" என்று பதிவிட்டுள்ளார்.