தமிழ்நாட்டில் ரூ. 1,896 கோடி மதிப்பில் ஐந்து ரயில் நிலையங்களை மறுசீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். "புதிய ரயில் வழிதடங்களுக்காக 25 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. 50 நமோ பாரத் ரயில்கள், 100 அம்ரித் பாரத் ரயில்கள், 200 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன" என்ற தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.