புதிய கட்சி ஆரம்பித்தவர்கள் காணும் கனவு தவிடுபொடியாகும் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். விழுப்புரத்தில் நடந்த திமுக கூட்டத்தில் பேசிய அமைச்சர், “நம்ம ஊரில் மாநாடு நடத்தி, ஒருவர் கட்சி தொடங்கி, பரந்தூரில் மக்களைச் சந்தித்துள்ளார். இருக்கிற தொழிலை விட்டுவிட்டு, அரசியலுக்கு வந்த நடிகர்கள் பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். திடீரென கட்சி ஆரம்பித்து முதலமைச்சராகி விடலாம் என கனவு காண்கின்றனர்" என தவெக விஜய்யை மறைமுகமாக சாடியுள்ளார்.