அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு அக்டோபர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 1996-2001ஆம் ஆண்டு வரை
திமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பொன்முடி இருந்தார். அந்த நேரத்தில் அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2002ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு வேலூர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தார். தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக பொன்முடி தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.