அமைச்சர் மா.சுப்பிரமணியம் மீதான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் வேறு நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. நீதிபதி பிரபாகரன் வழக்கை விசாரித்து வந்த நிலையில் இன்று நீதிபதி வேங்கடவரதன் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. வேறு நீதிபதிக்கு மாற்றப்பட்டதால் வழக்கு விசாரணை ஜூன். 17-க்கு ஒத்தி வைக்கப்பட்டது. சிட்கோ நகர் நிலத்தை தனது மனைவி பெயருக்கு மாற்றி முறைகேட்டில் ஈடுபட்டதாக மா.சுப்பிரமணியம் மீது வழக்கு தொடரப்பட்டது.