ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்களுடன் அமைச்சர் ஆலோசனை

79பார்த்தது
ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்களுடன் அமைச்சர் ஆலோசனை
சென்னையில் உள்ள ஆஸ்திரேலிய தூதரக அதிகாரி தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் ஆலோசனை மேற்கொண்டார். ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாட்டின் கூட்டுத் திட்டங்கள் மூலம் அரசு பள்ளி மாணவர்களின் திறமையை மேம்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாணவர்களுக்கு அர்த்தமுள்ள கற்றல் வாய்ப்புகளை உருவாக்க இந்த முயற்சிகளை முன்னெடுப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் ஆஸ்திரேலிய கல்வி அதிகாரிகள் பங்கேற்று திட்டங்களை விளக்கினர்.

தொடர்புடைய செய்தி