தமிழ்நாடு முழுவதும் புதிய ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டம் ஜூன் 15 முதல் அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில், 'புதிய மினி பஸ் திட்டம் 2024' தயாரிக்கப்பட்டு, புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் இத்திட்டத்தை துவக்கி வைக்க உள்ளார். மாநிலம் முழுவதும் முதற்கட்டமாக 1,842 புதிய மினி பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.