தமிழகத்தில் பால்வளம் உச்சமடைந்துள்ளது: அமைச்சர்

64பார்த்தது
பால்வளம் தமிழ்நாட்டில் உச்சத்தை தொட்டுள்ளது என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். நாகை ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு நாளைக்கு 38 லட்சம் லிட்டர் பால் ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நாகை மாவட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக விவசாயம் பெரும் சவாலாக உள்ளது. மாவட்டத்தில் பால் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு மானியத்தில் வட்டியில்லா கடன் உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தொடர்புடைய செய்தி