நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். மாறாக அந்த அணி தோல்வியை சந்தித்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் எழும். டெல்லி அணி தோல்வியை சந்தித்தால் தொடரில் இருந்து வெளியேறும்.