பிரபல ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி குளித்த தண்ணிரை கொண்டு உருவாக்கப்பட்ட சோப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். டாக்டர் ஸ்குவாட்ச் நிறுவனமும், நடிகை சிட்னி ஸ்வீனியும் இணைந்து இந்த சோப்பை உருவாக்கியுள்ளனர். இதன் விலை அமெரிக்க மதிப்பில் 8 டாலராக (ரூ. 684) நிர்ணயித்துள்ளனர். மேலும், ஜூன் 6-ம் தேதி முதல் விற்பனை தொடங்குவதாகவும் அறிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, முன்பதிவு செய்யும் முதல் 100 நபர்களுக்கு இலவசமாக சோப் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.