மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் (வீடியோ)

62பார்த்தது
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று சித்திரை திருவிழாவின் முக்கிய நாளான தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் திரண்டு தேரை வடம்பிடித்து இழுத்து மீனாட்சியின் அருளை பெற்று தரிசனம் செய்து வருகின்றனர். 4 மாசி வீதியிலும் தேர் வீதி உலா வருவதால் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. காவல்துறை சார்பில் உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 

நன்றி: Sun News

தொடர்புடைய செய்தி