ஏரியில் பிணமாக மீட்கப்பட்ட மருத்துவ கல்லூரி மாணவி

69பார்த்தது
ஏரியில் பிணமாக மீட்கப்பட்ட மருத்துவ கல்லூரி மாணவி
கர்நாடகா: மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த மகாலட்சுமி (வயது 20) ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணாவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படித்துவந்தார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை கல்லூரிக்குச் சென்ற மகாலட்சுமி, நள்ளிரவு வரை வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் போலீசில் புகாரளித்தனர். போலீசார் மாணவியை தேடிய நிலையில், நேற்று காலை சிங்கராஜிபுரா ஏரியில் பிணமாக மிதப்பதாக தகவல் கிடைத்தது. தொடர்ந்து மாணவியின் உடலை கைப்பற்றிய போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி