தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள 11,350 எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்களின் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நடந்தது. கடந்த ஜூன் 6 தேதி தொடங்கி ஜூன் 29 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த ஆண்டு மொத்தம் 72,943 மாணவர்கள் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டை விட 65% விண்ணப்பங்கள் கூடுதலாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் 5200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.