தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை அரசியல் வாரிசாக அறிவித்ததை பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சருமான மாயாவதி திரும்பப் பெற்றார். இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள அவர், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆகாஷ் ஆனந்த் நீக்கப்படுகிறார். ஆகாஷ் அரசியலில் முதிர்ச்சி அடையும் வரை கட்சிப் பதவியில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார். கட்சியின் நலன் கருதி இந்த முடிவை எடுக்கிறேன் என தெரிவித்துள்ளார்.