நைஜீரியாவில் கனமழை மற்றும் வெள்ளம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொக்வா நகரில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் கிட்டத்தட்ட 700 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 200-க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, மேலும் 500 பேர் இன்னும் காணவில்லை. அவர்கள் அனைவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.