விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. ஆலைக்குள் தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 10 கிலோமீட்டர் சுற்றளவுக்கு அதிர்வு ஏற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து சிதறுவதால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. பட்டாசு ஆலைக்குள் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.