இஸ்லாமாபாத் நகரில் உள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்பின் வீடு அருகே பயங்கர குண்டுவெடிப்பு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது வசிக்கும் குடியிருப்பு பகுதியில் இருந்து சுமார் 20 கி.மீ., தொலைவில் நடந்த இந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து பிரதமர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ள சூழலில் பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்தியா தொடர் பதிலடியை கொடுத்து வருகிறது.