மாருதி சுசுகி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காரான e-Vitara காரின் ஃபர்ஸ்ட் டீசரை கடந்த மாதம் வெளியிட்டது. இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மாருதி சுசுதி நிறுவனம் தனது முதல் மின்சார காரன இ-விட்டாராவை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் ஆரம்பவிலை ரூ.17 லட்சம் முதல் ரூ.26 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் வரும் ஜூன் மாதத்திற்குள் ஐரோப்பா, ஜப்பான் மற்றும் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.