ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வரில் கடந்த செப். 29ஆம் தேதி அடுக்குமாடி வீட்டிற்குள் புகுந்த இரண்டு கொள்ளையர்கள் வீட்டில் இருந்த விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து விட்டு தனது குழந்தையுடன் இருந்த இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதன்பின்னர் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளிகளை போலீசார் இன்று (அக். 2) கைது செய்தனர்.