தமிழ்நாட்டில் இன்று (ஜன.24) ‘திரைலோக்கிய கௌரி விரதம்’ கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதத்தை திருமணம் ஆகாத பெண்கள் கடைபிடித்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. இரவு வீட்டில் கலசம் அமைத்து கௌரி தேவியை ஆவாகனம் செய்து, 16 விளக்குகள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும். கௌரியை மனமுருகி வழிபடுபவர்களுக்கு நிச்சயம் திருமணம் கைகூடும். பூஜை முடிந்ததும் அருகில் உள்ள பெண்களுக்கு மங்கலப் பொருட்கள் கொடுத்து ஆசி பெறலாம்.